கொடுத்த கடனை திருப்பி கேட்ட பெண் சுத்தியலால் அடித்துக் கொலை

தெலுங்கானாவில் கொடுத்த கடனை திருப்பி கேட்ட பெண் சுத்தியலால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

ரங்காரெட்டி,

தெலுங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டத்தில் கொடுத்த கடனை திருப்பி கேட்டபோது ஏற்பட்ட தகராறில் பெண் ஒருவர் சுத்தியலால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எல்பி நகர் காவல் எல்லைக்குட்பட்ட சிவ கங்கா காலனியைச் சேர்ந்தவர் சரோஜினி. இவர் தனது பக்கத்து வீட்டில் வசிக்கும் நரசம்மா என்பவரிடம் ரூ. 20 ஆயிரம் கடனாக வாங்கியுள்ளார். இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை நரசம்மா கொடுத்த கடனை திருப்பி கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த சரோஜினி, நரசம்மாவின் முகத்தில் சுத்தியலால் பயங்கரமாக தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த நரசம்மா உயிரிழந்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் நரசம்மாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து சரோஜினியை காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com