தெலுங்கானாவில் இதுவரை இல்லாத அளவாக கொரோனா பாதிப்பில் புதிய உச்சம்

தெலுங்கானாவில் இதுவரை இல்லாத அளவாக கொரோனா பாதிப்பில் புதிய உச்சம் தொட்டுள்ளது.
தெலுங்கானாவில் இதுவரை இல்லாத அளவாக கொரோனா பாதிப்பில் புதிய உச்சம்
Published on

ஐதராபாத்,

தெலுங்கானாவில் இதுவரை இல்லாத அளவாக இன்று கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. அம்மாநிலத்தில் ஒரே நாளில் 10,122- பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதி 8,126- பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதே ஒருநாள் அதிகபட்ச பாதிப்பாக இருந்தது. தொற்று பாதிப்பை கண்டறிய 99,638- மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

தெலுங்கானாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்து 11 ஆயிரத்து 905- ஆக உள்ளது. அதேபோல், தொற்று பாதிப்பு காரணமாக 52- பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பு காரணமாக இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 2,094- ஆக உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com