ஜம்மு காஷ்மீர் அரசை ‘டிஸ்மிஸ்’ செய்ய வேண்டும் சுப்பிரமணியன் சாமி சொல்கிறார்

ஜம்மு காஷ்மீர் அரசை ‘டிஸ்மிஸ்’ செய்ய வேண்டும் என சுப்பிரமணியன் சாமி கூறிஉள்ளார். #SubramanianSwamy #BJP
ஜம்மு காஷ்மீர் அரசை ‘டிஸ்மிஸ்’ செய்ய வேண்டும் சுப்பிரமணியன் சாமி சொல்கிறார்
Published on

புதுடெல்லி,

ஜம்மு காஷ்மீரில் ராணுவ வாகனங்கள் மீது தாக்குதல் நடத்திய பொதுமக்கள் மீது பாதுகாப்பு படை நடத்திய தாக்குதலில் இருவர் உயிரிழந்த விவகாரம் மாநிலத்தில் மீண்டும் பதட்டமான சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் ராணுவத்திற்கு எதிராக ஜம்மு காஷ்மீர் மாநில போலீஸ் கொலை வழக்கை பதிவு செய்து உள்ளதற்கு பா.ஜனதா எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. எப்.ஐ.ஆர்ரில் ராணுவ அதிகாரியின் பெயரை நீக்க வேண்டும் என பா.ஜனதா வலியுறுத்தி வருகிறது. ஆனால் மத்திய பாதுகாப்புத் துறை மந்திரி சீதாராமனிடம் ஆலோசனை நடத்திய பின்னரே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டது என மெகபூபா முப்தி விளக்கம் கொடுத்தார். ஜம்மு காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் பாரதீய ஜனதா கூட்டணி ஆட்சியை நடத்தி வருகிறது.

இந்நிலையில் பாரதீய ஜனதா தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சாமி ஜம்மு காஷ்மீர் அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என கூறிஉள்ளார்.

சுப்பிரமணியன் சாமி பேசுகையில், இது என்ன முட்டாள்தனம்? அரசை டிஸ்மிஸ் செய்யவேண்டும். மெகபூபா முப்தியிடம் எப்.ஐ.ஆர்.ரை ரத்து செய்ய வேண்டும் என்று கூறவேண்டும், இல்லையெனில் அவருடைய அரசை கவிழ்க்க வேண்டும். இந்த அரசை இன்னும் இயக்கிக்கொண்டு இருக்கிறோம்? இந்நாள் வரையில் என்னால் புரிந்துக்கொள்ள முடியவில்லை, என கூறிஉள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com