கர்நாடகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பநிலை மேலும் குறையும் - வானிலை ஆய்வு மையம் தகவல்

மாநிலத்தின் சமவெளி பகுதிகளில் விஜயாப்புராவில் மிக குறைந்தபட்சமாக 55.22 டிகிரி வெப்பநிலை பதிவாகியுள்ளது.
அதிகரிக்கும் குளிர்
Published on: 

பெங்களூரு,

கர்நாடகத்தில் குளிரின் தாக்கம் அதிகரித்துள்ளது. அடுத்த 2 நாட்களுக்கு வெப்ப நிலை மேலும் குறைய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதிகரிக்கும் குளிர்

கர்நாடகத்தில் வடகிழக்கு பருவமழை படிப்படியாக குறைந்து வரும் நிலையில், மாநிலம் முழுவதும் வறண்ட வானிலை நிலவி வருகிறது. இதற்கிடையே, அடுத்த 2 நாட்களுக்கு குறைந்தபட்ச வெப்பநிலை மேலும் குறைய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் குளிரின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதன்காரணமாக மாநிலத்தின் பல பகுதிகளில் நடுங்க வைக்கும் குளிர் நிலவி வருகிறது.

கர்நாடகத்தின் பல்வேறு பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை சரிந்து வருகிறது. மாநிலத்தின் சமவெளி பகுதிகளில் விஜயாப்புராவில் மிக குறைந்தபட்சமாக 55.22 டிகிரி வெப்பநிலை பதிவாகியுள்ளது. அடுத்த 2 நாட்களுக்கு வெப்பநிலையில் மேலும் சரிவு ஏற்படக்கூடும். அதன்பிறகு வெப்பநிலையில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழைக்கு வாய்ப்பு இல்லை

கடலோர கர்நாடகத்தின் தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தர கன்னடா ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பில்லை. இதேபோல் வடக்கு உள்மாவட்டங்களான பெலகாவி, பாகல்கோட்டை, பீதர், தார்வார், கதக், ஹாவேரி, கலபுரகி, கொப்பல், ராய்ச்சூர், விஜயபுரா, யாதகிரி ஆகிய மாவட்டங்களிலும் வறண்ட வானிலை நிலவும்.

தெற்கு உள்மாவட்டங்களான பெங்களூரு, பெங்களூரு புறநகர், பல்லாரி, சாம்ராஜ்நகர், சிக்பள்ளாப்பூர், சிக்கமகளூரு, சித்ரதுர்கா, தாவணகெரே, ஹாசன், குடகு, கோலார், மண்டியா, மைசூரு, ராமநகர், சிவமொக்கா, துமகூரு, விஜயநகர் ஆகிய மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் குளிர் அதிகரிக்க தொடங்கி உள்ளதால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

X