தெலுங்கானாவில் தலைமைச்செயலக வளாகத்தில் கோவில், மசூதி, தேவாலயம்..!

தெலுங்கானாவில் தலைமைச்செயலக வளாகத்தில் ஒரு கோவில், மசூதி, தேவாலயம் ஆகியவை கட்டப்பட்டுள்ளன.
தெலுங்கானாவில் தலைமைச்செயலக வளாகத்தில் கோவில், மசூதி, தேவாலயம்..!
Published on

ஐதராபாத்,

தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் கடந்த ஏப்ரல் 30-ந் தேதி புதிய தலைமைச்செயலகம் திறக்கப்பட்டது. அந்த தலைமைச்செயலக வளாகத்தில் ஒரு கோவில், மசூதி, தேவாலயம் ஆகியவை கட்டப்பட்டுள்ளன. நேற்று நடைபெற்ற அவற்றின் திறப்புவிழாவில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்-மந்திரி சந்திரசேகர் ராவ் பங்கேற்றனர். மும்மத வழிப்பாட்டு இடங்களில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனைகளிலும் அவர்கள் கலந்துகொண்டனர்.

இந்த திறப்புவிழாவில், மந்திரிகள், அகில இந்திய மஜ்லிஸ் கட்சி தலைவரும், ஐதராபாத் எம்.பி.யுமான ஓவைசி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். மசூதி திறப்பு விழாவில் பேசிய முதல்-மந்திரி சந்திரசேகர் ராவ், 'மும்மத வழிபாட்டு இடங்களுடன், நல்லிணக்கம், சகோதரத்துவத்துக்கு ஒட்டுமொத்த நாட்டுக்கும் சிறந்த முன்னுதாரணமாக தெலுங்கானா தலைமைச்செயலகம் திகழ்கிறது' என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com