பஸ்சுக்காக காத்திருந்த மாணவர்கள் மீது மோதிய டெம்போ - 3 பேர் பலி

விபத்தில் பஸ்சுக்கு காத்திருந்த மாணவர்கள் 9 பேர் படுகாயமடைந்தனர்.
பஸ்சுக்காக காத்திருந்த மாணவர்கள் மீது மோதிய டெம்போ  - 3 பேர் பலி
Published on: 

மும்பை,

மராட்டியத்தில் பஸ்சுக்காக காத்திருந்த மாணவர்கள் மீது டெம்போ மோதிய சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.

மராட்டிய மாநிலம் புனே மாவட்டத்தில் உள்ள பஸ் ஸ்டாண்டில் இன்று மதியம் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் பஸ்சுக்காக காத்திருந்தனர்.

3 மாணவர்கள் பலி

அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து வேகமாக வந்த டெம்போ பஸ் ஸ்டாண்டில் நின்றுகொண்டிருந்த மாணவர்கள் மீது மோதியது. இந்த விபத்தில் பஸ்சுக்கு காத்திருந்த மாணவர்கள் 9 பேர் படுகாயமடைந்தனர்.

இதையடுத்து அனைவரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கபட்ட நிலையில் 3 மாணவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், டெம்போ டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X