டெம்போ மீது லாரி மோதி கோர விபத்து - 8 பேர் பலி

விபத்தில் 32 பேர் படுகாயமடைந்தனர்.
டெம்போ மீது லாரி மோதி கோர விபத்து - 8 பேர் பலி
Published on

போபால்,

மத்தியபிரதேச மாநிலம் பிஹைண்ட் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணபூர், பிலா துர்சியா, முகமதி ஆகிய கிராமங்களை சேர்ந்த 40 பேர் விவசாய வேலைக்காக உத்தரபிரதேசத்தின் லகீம்பூர் கேரிக்கு சென்றுள்ளனர்.

விவசாய பணிகளை முடித்துவிட்டு தொழிலாளர்கள் 40 பேரும் டெம்போவில் பிஹைண்ட் மாவட்டத்திற்கு திரும்பிக்கொண்டிருந்தனர்.

விபத்து - 8 பேர் பலி

இந்நிலையில், பிஹைண்ட் - குவாலியர் தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை டெம்போ சென்றபோது சாலையின் குறுக்கே மாடு வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த டெம்போ டிரைவர், மாடு மீது மோதாமல் இருக்க டெம்போவை சாலையின் மறுபுறம் திரும்பியுள்ளார்.

அப்போது சாலையின் மறுபுறம் வேகமாக வந்த லாரி மீது கட்டுப்பாட்டை இழந்த டெம்போ மோதியது. இந்த கோர விபத்தில் டெம்போவில் பயணம் செய்த 8 பேர் உயிரிழந்தனர். எஞ்சிய 32 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர் விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அதேவேளை, இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com