மணிப்பூரில் பதற்றம் நீடிப்பு; மக்கள் அமைதி காக்குமாறு முதல்-மந்திரி வேண்டுகோள்

கடந்த 3 நாட்களாக அந்த மாவட்டம் மட்டுமின்றி உக்ருல், காங்போபி மாவட்டங்களில் விட்டு விட்டு வன்முறை நடந்து வருகிறது.
மணிப்பூர்
Published on: 

மணிப்பூரில் மீண்டும் வன்முறை சம்பவங்கள் தலைதூக்கியுள்ளன. அங்கு காம்ஜோங் மாவட்டத்தில் கடந்த 9-ந் தேதி 22 வயது இளம்பெண் ஒருவர் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். அதைத்தொடர்ந்து கடந்த 3 நாட்களாக அந்த மாவட்டம் மட்டுமின்றி உக்ருல், காங்போபி மாவட்டங்களில் விட்டு விட்டு வன்முறை நடந்து வருகிறது. இதில் பலியானோர் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்து விட்டது. இதனால் அந்த பகுதிகளில் பதற்றம் நீடித்து வருகிறது.

இதனால் கவலை அடைந்துள்ள முதல்-மந்திரி கெம்சந்த், அனைத்து தரப்பினரும் அமைதி காக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில், 'அப்பாவி மக்களை கொன்று குவிப்பதும், வன்முறை பெருகி வருவதையும் நான் கண்டிக்கிறேன். நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்து அமைதியையும், சட்டம்-ஒழுங்கையும் நிலைநாட்டுவதற்கு அதிகாரிகளை அறிவுறுத்தி இருக்கிறேன்' என குறிப்பிட்டு உள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com