பீகாரில் கும்பல் தாக்குதலில் ஒருவர் பலி, கால்நடையை திருட வந்தவர் என குற்றச்சாட்டு

பீகார் மாநிலம் அராரியா மாவட்டத்தில் கால்நடையை திருட வந்தவர் என்று 55 வயது முதியவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
பீகாரில் கும்பல் தாக்குதலில் ஒருவர் பலி, கால்நடையை திருட வந்தவர் என குற்றச்சாட்டு
Published on

அராரியா,

சிமர்பானி கிராமத்தில் 55 முதியவர் முகத் காபூல் என்பவர் கும்பலால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. முதியவர் தன்னை பாதுகாத்துக்கொள்ளவும், குற்றவாளியில்லை என்று சொல்லவும் போராடுகிறார். ஆனால் கும்பல் அவருடைய முகம், மார்பு பகுதியில் கொடூரமான தாக்குதலை நடத்தியுள்ளது. அவர் உயிரற்று நிலத்தில் விழும் வரையில் கும்பல் கொடூரமான தாக்குதலை நடத்தியுள்ளது.

முதியவர் கொலை தொடர்பாக அடையாளம் தெரியாத நபர்களுக்கு எதிராக போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது. குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என முகத் காபூல் உறவினர்கள் வலியுறுத்தியுள்ளார்கள். அவர்கள் மிகுந்த கோபத்துடன் உள்ளதால் அப்பகுதியில் பெரும் பதட்டமான நிலை நீடிக்கிறது. கும்பல் தாக்குதலுக்கான முழு காரணம் தெரியவரவில்லை, அப்பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பதட்டம் நீடிக்கும் நிலையில் நிதிஷ் குமார் அரசை எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com