இந்தியா-சீனா இடையே தொடரும் பதற்றம்: எத்தகைய நிலையையும் எதிர்கொள்ளத் தயார் - முப்படைகள் தளபதி பிபின் ராவத்

இந்தியா-சீனா எல்லையில் நிலவி வரும் பதற்றத்திற்கு இடையில் எத்தகைய நிலையையும் எதிர்கொள்ளத் தயார் நிலையில் இருப்பதாக முப்படைகள் தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.
இந்தியா-சீனா இடையே தொடரும் பதற்றம்: எத்தகைய நிலையையும் எதிர்கொள்ளத் தயார் - முப்படைகள் தளபதி பிபின் ராவத்
Published on

புதுடெல்லி,

இந்தியா-சீனா எல்லையில் இருநாட்டு வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டு இந்திய வீரர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு பிறகு, இரு நாட்டுக்கும் இடையிலான உறவில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியா-சீனா இடையிலான பதற்றத்தை தணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அதே நேரத்தில் எத்தகைய நடவடிக்கையையும் எதிர்க்கெள்ளத் தேவையான நடவடிக்கையை எடுக்கப்பட்டு உள்ளதாக முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.

இந்திய, சீன எல்லையில் தெடரும் ஊடுருவலை எதிர்கெள்ள நீண்டக்கால அடிப்படையில் எத்தகைய தாக்குதலையும் முறியடிக்க இந்தியா தயாராக உள்ளதாகவும் பிபின் ராவத் தெரிவித்துள்ளார். ராணுவ ரீதியில் 5 முறையும், தூதரக ரீதியில் 3 முறையும் பேச்சு நடைபெற்ற நிலையிலும், இருநாடுகள் இடையிலான உரசல் நீடித்து வரும் நிலையில், முப்படைகளின் தயார் நிலை குறித்து பெது கணக்கு குழுவிடம் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com