விடுதி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து; 3-ம் வகுப்பு மாணவர் உயிரிழப்பு


விடுதி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து; 3-ம் வகுப்பு மாணவர் உயிரிழப்பு
x

காயமடைந்த மாணவர்களை சுமார் 85 கி.மீ. தொலைவில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இடாநகர்,

அருணாசல பிரதேச மாநிலம் ஷியோமி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியின் விடுதியில், இன்று அதிகாலை 2 மணியளவில் எதிர்பாராத விதமாக திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், விடுதியில் தங்கியிருந்த 3-ம் வகுப்பு மாணவர் தாஷி ஜெம்பன்(வயது 8), தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் இந்த சம்பவத்தில் லுக்கி புஜென்(வயது 8), தனு பூஜென்(வயது 9) மற்றும் தாயி புஜென்(வயது 11) ஆகிய 3 மாணவர்கள் படுகாயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு சுமார் 85 கி.மீ. தொலைவில் உள்ள மாவட்ட தலைநகரான தாட்டோவில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக அங்கிருந்து சுமார் 130 கி.மீ. தொலைவில் உள்ள மற்றொரு மருத்துவமனைக்கு மாணவர்களை கொண்டு சென்றனர். அவர்களது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த தீ விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story