காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் ஒரு வீரர் பலி; மற்றொரு வீரர் உள்பட 3 பேர் காயம்

ஜம்மு மற்றும் காஷ்மீரில் அடுத்தடுத்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒரு வீரர் பலியானார். மற்றொரு வீரர் உள்பட 3 பேர் காயம் அடைந்து உள்ளனர்.
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் ஒரு வீரர் பலி; மற்றொரு வீரர் உள்பட 3 பேர் காயம்
Published on

ஸ்ரீநகர்,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் ஸ்ரீநகரில் லால் சவுக் பகுதியில் மைசுமா என்ற இடத்தில் பயங்கரவாதிகள் மறைந்திருந்து திடீரென வீரர்கள் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த தாக்குதலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் (சி.ஆர்.பி.எப்.) 2 பேர் காயமடைந்து உள்ளனர். எனினும் வீரர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளார்.

இதேபோன்று, புல்வாமா மாவட்டத்தின் லஜூரா கிராமத்தில் பயங்கரவாதிகள் திடீரென 2 பேர் மீது தாக்குதல் நடத்தினர். இதில், குடிமக்களில் 2 பேர் காயமடைந்து உள்ளனர். அவர்கள் இருவரும் உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். அந்த பகுதியை போலீசார் சுற்றி வளைத்து தங்களது கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com