காஷ்மீரில் பொதுமக்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு: ஒருவர் உயிரிழப்பு

ஜம்மு மற்றும் காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த 2 பேரில் ஒருவர் உயிரிழந்து உள்ளார்.
காஷ்மீரில் பொதுமக்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு: ஒருவர் உயிரிழப்பு
Published on

அனந்த்நாக்,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் பீஜ்பெஹேரா என்ற பகுதியில் இரண்டு பேர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.

இதில், ஷாநவாஸ் அகமது பட் மற்றும் சஞ்சீத் அகமது பார்ரே ஆகிய இருவர் காயமடைந்தனர். அவர்களில் சஞ்சீத் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்து விட்டார். ஷாநவாசை ஸ்ரீநகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளார்.

இதனை தொடர்ந்து காஷ்மீர் போலீசார் அந்த பகுதியில் தேடுதல் முகாமிட்டு தப்பியோடிய பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com