இந்திய நாடாளுமன்ற வரலாற்றிலேயே இது துன்பமிக்க தினம் : ராகுல் காந்தி கடும் விமர்சனம்

இந்திய நாடாளுமன்ற வரலாற்றிலேயே இது துன்பமிக்க தினம் என்று ராகுல் காந்தி கடுமையாக சாடியுள்ளார்.
இந்திய நாடாளுமன்ற வரலாற்றிலேயே இது துன்பமிக்க தினம் : ராகுல் காந்தி கடும் விமர்சனம்
Published on

புதுடெல்லி,

பாஜக எம்பி சாத்வி பிரக்யா தாகூர் நாடாளுமன்றத்தில் பேசியபோது, காந்தியை சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சேவை தேச பக்தர் எனக் குறிப்பிட்டது சர்ச்சையை கிளப்பியுள்ளது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சாத்வி பிரக்யா தாகூரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்ற ஆலோசனைக்குழுவில் இருந்து சாத்வி பிரக்யா தாகூர் நீக்கப்படுவதாக பாஜக அறிவித்தது.

எனினும், பிரக்யா தாகூர் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் எம்.பிக்கள் மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இந்த நிலையில், ராகுல் காந்தி தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:- பயங்கரவாதி கோட்சேவை பயங்கரவாதி பிரக்யா தேசபக்தர் என்று கூறியுள்ளார். இந்திய நாடாளுமன்ற வரலாற்றிலேயே இது துன்பமிக்க தினம் என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com