காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை

பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான்.
காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை
Published on

ஜம்மு,

காஷ்மீரின் கிஷ்ட்வார் மாவட்டத்தில் உள்ள சாட்ரு வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக உளவுத்துறை ரகசிய தகவல் அளித்தது. அதன்பேரின் அங்கு ராணுவ வீரர்களும், காஷ்மீர் போலீசாரும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

ஓரிடத்தில் மறைந்திருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுடத் தொடங்கினர். பாதுகாப்பு படையினரும் எதிர்தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த சண்டையில் ஒரு பயங்கரவாதி பலியானார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com