காஷ்மீரில் பாதுகாப்பு படை என்கவுண்ட்டரில் பயங்கரவாதி சுட்டு கொலை

காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மற்றும் பயங்கரவாதிகள் இடையே நடந்த மோதலில் பயங்கரவாதி சுட்டு கொல்லப்பட்டார்.
காஷ்மீரில் பாதுகாப்பு படை என்கவுண்ட்டரில் பயங்கரவாதி சுட்டு கொலை
Published on

ஜம்மு,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் அவந்திபோராவில் பாம்பூர் பகுதியில் க்ரூ என்ற இடத்தில் போலீசர் மற்றும் பாதுகாப்பு படையினர் இணைந்து பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இதில், பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் படையினரை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர்.

இந்த மோதலில் பயங்கரவாதியை படையினர் சுட்டு கொன்றனர். தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com