

ஸ்ரீநகர்,
காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகரில் லால் சவுக்கின் பிரதாப் பார்க் பகுதியில் மத்திய படை போலீசார் (சி.ஆர்.பி.எப்.) நேற்று ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள் திடீரென கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் மத்திய படை போலீசார் 2 பேர் படுகாயம் அடைந்தனர். மேலும் அப்பாவி பொதுமக்கள் 7 பேரும் காயங்களுடன் உயிர்தப்பினர்.
காயம் அடைந்தவர்களை மீட்ட போலீசார் அவர்களை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பயங்கர சத்தத்துடன் குண்டுகள் வெடித்ததால், ஞாயிற்றுக்கிழமை சந்தைக்கு வந்த பொதுமக்கள் பீதி அடைந்தனர். பயங்கரவாதிகளை தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகிறார்கள்.