மதரசாக்களில் பயங்கரவாதிகள் வளருகின்றனர்; மத்திய பிரதேச பெண் மந்திரி பரபரப்பு பேச்சு

மதரசாக்களில் பயங்கரவாதிகள் வளருகின்றனர் என்றும் அதனால் அரசு நிதியை நிறுத்த வேண்டும் என்றும் மத்திய பிரதேச பெண் மந்திரி பேசியது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
மதரசாக்களில் பயங்கரவாதிகள் வளருகின்றனர்; மத்திய பிரதேச பெண் மந்திரி பரபரப்பு பேச்சு
Published on

இந்தூர்,

மத்திய பிரதேசத்தில் வருகிற நவம்பர் 3ந்தேதி சட்டசபைக்கான இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான பணியில் அரசியல் கட்சிகள் தீவிரமுடன் செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில், மாநில கலாசார மந்திரி உஷா தாகுர் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும்பொழுது, நாட்டின் அனைத்து அடிப்படைவாதிகளும் மற்றும் பயங்கரவாதிகளும் மதரசாக்களில் வளருகின்றனர். குழந்தைகள் வேறு, மாணவர்கள் வேறு.

அதனால், அனைத்து மத மாணவர்களுக்கும் ஒரே கல்வி வழங்கப்பட வேண்டும். மதம் சார்ந்த கல்வியால் வெறித்தனம் அதிகரிக்கிறது. வெறுப்புணர்வு பரவுகிறது.

பயங்கரவாதிகளின் தொழிற்சாலையாக ஜம்மு மற்றும் காஷ்மீர் ஆக்கப்பட்டு விட்டது. மதம் சார்ந்த கல்வி வேண்டும் என விரும்புபவர்கள் தங்களது சொந்த செலவில் அதனை பெறலாம். அதற்கு அரசியலமைப்பு உரிமை அளிக்கிறது.

எனினும், மதரசாக்களுக்கு வழங்கப்படும் அரசு நிதியுதவி நிறுத்தப்பட வேண்டும். வக்பு வாரியம் பொருளாதார ரீதியாக உலகில் மிக வலிமையான அமைப்பு. மதரசாக்களுக்கு நிதி வழங்கும் பொறுப்பினை அது எடுத்து கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.

இதுபற்றி காங்கிரஸ் கட்சி, இடைத்தேர்தலில் மதம் சார்ந்த பிரசாரத்தில் ஈடுபட பா.ஜ.க. முயற்சி செய்கிறது. அதன் ஒரு பகுதியாக உஷா பேசியிருக்கிறார் என குற்றச்சாட்டு கூறியுள்ளது. தேர்தல் ஆணையம் இதனை கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்து உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com