கொல்கத்தாவில் இருந்து பாங்காக் புறப்பட்ட விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு


கொல்கத்தாவில் இருந்து பாங்காக் புறப்பட்ட விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு
x

விமானத்தில் 137 பேர் பயணித்தனர்.

கொல்கத்தா,

மேற்குவங்காள மாநிலம் கொல்கத்தாவில் தாய்லாந்தில் உள்ள பாங்காக்கிற்கு நேற்று அதிகாலை தாய் லயன் ஏர் விமானம் புறப்பட்டது. அந்த விமானத்தில் 130 பயணிகள், 7 விமான பணியாளர்கள் என மொத்தம் 137 பேர் பயணித்தனர்.

ஓடுதளத்தில் இருந்து வானில் பறக்க விமானத்தை விமானி இயக்கினார். அப்போது, விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதை விமானி கண்டறிந்தார். இதையடுத்து, உடனடியாக விமானம் புறப்படுவதை விமானி நிறுத்தினார். மேலும், விமானத்தை ஓடுதளத்தில் இருந்து விமான நிறுத்துமிடத்திற்கு கொண்டு சென்றார்.

விமானத்தை பரிசோதித்த தொழில்நுட்ப குழு விமானத்தில் கோளாறு இருப்பதை உறுதி செய்தனர். இதையடுத்து, விமான பயணம் ரத்து செய்யப்பட்டது. இதனால், பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

1 More update

Next Story