அதிர்ஷ்டவசமாக இன்னும் ஒருவருடம் தான் இருக்கிறது பட்ஜெட் குறித்து ராகுல் காந்தி

நன்றி! நல்ல வேளை இன்னும் ஒருவருடம் தான் இருக்கிறது என பட்ஜெட் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கிண்டல் அடித்து உள்ளார். #RahulGandhi #Budget2018
அதிர்ஷ்டவசமாக இன்னும் ஒருவருடம் தான் இருக்கிறது பட்ஜெட் குறித்து ராகுல் காந்தி
Published on

சென்னை

பாராளுமன்றத்தில் இன்று 2018-19 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பொது பட்ஜெட்டை நிதி மந்திரி அருண் ஜெட்லி தாக்கல் செய்து உரையாற்றினார்.

அதில் பல்வேறுதிட்டங்கள் குறித்த அறிவிப்பை அருண்ஜெட்லி வெளியிட்டார். இதற்கு எதிர்கட்சிகள் பெரும்பாலும் ஏமாற்றத்திற்கான பட்ஜெட் என விமர்சித்தனர். சிலர் இது தேர்தலுக்கான பட்ஜெட் என விமர்சித்தனர்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பட்ஜெட் பற்றி தனது கவிதை நடையில் டுவிட்டரில் கூறி உள்ளதாவது :-

நான்கு ஆண்டுகள் கடந்தும் இன்னும் விவசாயிகளுக்கு நியாமன விலை கிடைக்க செய்வோம் என உறுதி தான் உள்ளது.

நான்கு ஆண்டுகள் கடந்தும் கற்பனையான திட்டங்கள்... பொருந்தாத பட்ஜெட்டாக உள்ளது.

நான்கு ஆண்டுகள் கடந்தும் நமது இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லை.

அதிர்ஷ்டவசமாக இன்னும் ஒருவருடம் தான் இருக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com