

புதுடெல்லி
தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் அவரது மனைவி சுனந்தா புஷ்கர் பற்றி ஒளிபரப்பும் போது தனக்கு பொது மக்கள் மத்தியில் இழுக்கு ஏற்படும்படி நிகழ்ச்சி அமைந்ததாக தனது மனுவில் சசி தரூர் குறிப்பிட்டுள்ளார். மேலும் டெல்லி காவல்துறை சுனந்தா பற்றிய வழக்கின் விசாரணையை முடிக்கும் வரை இந்நிகழ்ச்சியை ஒளிபரப்பவும் தடை விதிக்கும்படியும் அவர் கோரியுள்ளார்.
கடந்த 8 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை சுனந்தா தொடர்பான நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. இல்லாத ஒரு விஷயத்தைப் பற்றி பேசி சசி தரூரின் புகழுக்கும், பொது வாழ்க்கைக்கும் பங்கும் ஏற்படுத்தியதாக வழக்கறிஞர் மூலம் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வழக்கு தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அர்னாப் சசி தரூர் தொலைக்காட்சி சேனலானது சுனந்தாவை யார் கொன்றார்கள் எனும் உண்மையை அறிய எடுக்கும் முயற்சியை தடுப்பதை நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறார். இதற்கு பதிலாக விசாரணை இவ்வளவு மோசமாக நடக்கிறது என்பது குறித்து கவலைப்பட வேண்டும் என்றார்.
சசி தரூர் குறிப்பிடுகையில் அர்னாப் இதற்கு முன் தலைமை ஆசிரியராக இருந்த சேனலில் இதே போன்ற ஒளிபரப்பை செய்த போது தேசிய ஒளிபரப்பு தரக்கட்டுப்பாடு ஆணையத்தால் தடுக்கப்பட்டார். டெல்லி காவல்துறையினர் தங்களது விசாரணையில் எந்தவொரு இடத்திலும் தன்னை சந்தேகப்பட்டு கேள்வி கேட்கவில்லை எனவும் கூறினார்.
சுனந்தா புஷ்கர் 2014 ஜனவரி 17 ஆம் தேதி தெற்கு டெல்லி நட்சத்திர விடுதி அறை ஒன்றில் இறந்து கிடந்தார்.