கள்ளக்காதலுக்கு கணவன் இடையூறு: பாம்பை வைத்து நாடகமாடிய மனைவி - கோர்ட்டு வழங்கிய அதிரடி தீர்ப்பு

அன்று இரவு அமித் தூங்கிய பிறகு, ரவிதா தனது கள்ளக்காதலனை வீட்டுக்கு வரவழைத்தார்.
கோர்ட்டு வழங்கிய அதிரடி தீர்ப்பு
Published on: 

மீரட்,

கணவரை கொலை செய்துவிட்டு, அவர் பாம்பு கடித்து இறந்ததாக நாடகமாட படுக்கையில் பாம்பை விட்ட மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலனுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் அக்பர்பூர் சதாத் கிராமத்தைச் சேர்ந்தவர் அமித் காஷ்யப். இவரு டைய மனைவி ரவிதா. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

இந்த தம்பதிக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆன நிலையில், அமித்தின் நண்பரான அமர் தீப் என்பவருடன் ரவிதாவுக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதனை அமித் கண்டித்ததால் அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இதனால் அமித்தை தீர்த்துக்கட்ட கள்ளக்காதல் ஜோடி இருவரும் திட்டமிட்டனர். கடந்த ஆண்டு ஏப்ரல் 12-ந் தேதி அமர்தீப் ஒரு பாம்பாட்டி பிரீதம்நாத் என்பவரை சந்தித்து உயி ருள்ள பாம்பு ஒன்றை விலைக்கு வாங்கினார்.

கொலை

அன்று இரவு அமித் தூங்கிய பிறகு, ரவிதா தனது கள்ளக்காதலனை வீட்டுக்கு வரவழைத்தார். இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். பின்னர் ரவிதா தனது கணவரின் வாயை பொத்த. அமர்தீப், அமித்தின் கழுத்தை நெரித்துக் கொலை செய்தார். பின்னர், அவர் பாம்பு கடியால் ஏற்பட்ட சாவு என குடும்பத்தி னரை நம்ப வைக்க அமித்தின் உடல் அருகில் அந்த உயிருள்ள பாம்பை படுக்கையில் போட்டுவிட்டுச் சென்றனர்.

மறுநாள் காலையில் அமித் படுக்கையில் பிணமாக கிடப்பதையும், அருகில் பாம்பு இருப்ப தையும் கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். கள்ளக்காதலர்களின் சதித்திட்டத்தின்படி ஆரம்பத்தில் அனைவரும் பாம்பு கடித்துதான் அமித் இறந்தார் என நம்பினர். ஆனால், பிரேத பரிசோதனை அறிக்கையில் அமித்தின் மூக்கு மற்றும் கழுத்தில் காயங்கள் இருப்பதும், அவர் கழுத்து நெரிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டதும் அம்பலமானது.

தூக்கு தண்டனை

இதையடுத்து அமித்தின் சகோதரர் மோனு அளித்த புகாரின் பேரில் போலீசார் ரவிதா மற் றும் அமர்தீப்பை கைது செய்தனர். இந்த வழக்கு மீரட் செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வந்தது. இவ்வழக்கில் பாம்பாட்டி பிரீதம்நாத் அளித்த சாட்சியமும், செல்போன் அழைப்பு விவரங் களும் முக்கிய ஆதாரங்களாக அமைந்தன.

இந்த வழக்கில் கள்ளக்காதல் ஜோடிகள் இருவரையும் குற்றவாளிகள் என கோர்ட்டு தீர்ப்பு கூறியது. அவர்களுக்கான தண்டனை விவரம் நேற்று அறிவிக்கப்பட்டது. அப்போது ரவிதா. அமர்தீப் ஆகிய இருவருக்கும் தூக்கு தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டார்.

மகனின் மரண அதிர்ச்சியில் அமித்தின் தந்தையும் உயிரிழந்த நிலையில், குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதித்ததற்கு அமித்தின் தாய் முனேஷ் தேவி வரவேற்பு தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com