

புதுடெல்லி,
நாடாளுமன்ற தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சி 12-வது வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிட்டது. இதில் குஜராத்தில் 2 பேர், உத்தரபிரதேசத்தில் ஒருவர் என 3 வேட்பாளர்களின் பெயர்கள் இடம்பெற்று உள்ளன.
உத்தரபிரதேசத்தில் ராம்பூர் தொகுதியில் சஞ்சய் கபூர் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் பா.ஜனதா சார்பில் நடிகை ஜெயபிரதா, சமாஜ்வாடிபகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி சார்பில் அசம் கான் ஆகியோர் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.