

அயோத்தி,
பெரும் எதிர்ப்புகளுக்கு இடையே நடைபெற்ற ராமர் கோவில் பூமி பூஜை விழாவை ராம பக்தர்கள் அனைவரும் டுவிட்டரில் டிரெண்ட் செய்தனர்.
அதில், 5 நூற்றாண்டுகள் காத்திருப்பு முடிவுக்கு வந்தது. எண்ணற்ற தியாகங்கள், எண்ணற்ற முயற்சிகளுக்கு வெற்றி கிடைத்துள்ளது, வரலாற்று சிறப்பு மிக்க நாள்.
ராமருக்கு கோவில் கட்டுவதன் மூலம் 492 ஆண்டு கால வனவாசம் முடிவுக்கு வந்தது, வனவாசம் சென்ற அரசர் திரும்பி வருகிறார், ராம ராஜ்யம் ஆரம்பம், ராமர் மீண்டும் தர்ம நகரத்திற்கு திரும்பினார் என்று பலவிதமான ஹேஷ்டேக்குகளை பதிவிட்டு உலக அளவில் ராமர் கோவில் பூமி பூஜை விழாவை டுவிட்டரில் ராம பக்தர்கள் டிரெண்ட் செய்தனர்.