

டோராடூன்.
உத்தரகாண்ட் மாநிலம் டோராடூனில் மூன்று நாள் நடைபெற இருக்கும் சர்வதேச ஆப்பிள் திருவிழா நேற்று தொடங்கியது. ஆப்பிள் திருவிழாவை அம்மாநிலத்தின் முதல் மந்திரி புஷ்கர் சிங் தமி தொடங்கி வைத்தார்.
ரேஞ்சர்ஸ் மைதானத்தில் நடைபெறும் விழாவை தொடங்கி வைத்த முதல் மந்திரி இவ்விழா உத்தரகாண்ட் மிகச்சிறந்த ஆப்பிள்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது என்ற தகுதியை தேசிய மற்றும் சர்வதேச அளவில் பெறுவதற்கு உதவும் என்று நம்புவதாக கூறினார்.
மேலும், இந்நிகழ்ச்சி உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆப்பிள் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு அவர்களின் விளைபொருட்களை நல்ல விலைக்கு விற்க புதிய வாய்ப்புகளை வழங்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.