குஜராத்தில் உள்ள நித்யானந்தாவின் ஆசிரமம் இடித்து தள்ளப்பட்டது

குஜராத்தில் உள்ள நித்யானந்தாவின் ஆசிரமம் நேற்று இடித்து தள்ளப்பட்டது.
குஜராத்தில் உள்ள நித்யானந்தாவின் ஆசிரமம் இடித்து தள்ளப்பட்டது
Published on

ஆமதாபாத்,

குஜராத் மாநிலம் ஆமதாபாத் ஹதிஜன் பகுதியில் நித்யானந்தா ஆசிரமம் நடத்திவந்தார். அங்கு 2 சிறுமிகள் கடத்தப்பட்டதாக எழுந்த புகாரில் நித்யானந்தா மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனால் அவர் வெளிநாடு தப்பிச்சென்றுள்ளார். அந்த ஆசிரமம் சர்ச்சைக்குரிய பள்ளியை நடத்திவரும் கலோரெக்ஸ் அறக்கட்டளையிடம் இருந்து சட்டவிரோதமாக குத்தகைக்கு பெறப்பட்டுள்ளதாக ஆமதாபாத் நகர மேம்பாட்டு ஆணையத்துக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் ஆணைய அதிகாரிகள் நேற்று அந்த ஆசிரமத்தை இடித்து தள்ளினர். உரிய சட்டப்படியும், போலீசுக்கும், கல்வித் துறைக்கும் தகவல் தெரிவித்துவிட்டு சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள ஆசிரமத்தை இடித்துள்ளோம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com