இயற்கையின் அழகு, மழைக்காட்டில் ஒரு அற்புதமான அனுபவம் - பிரதமர் மோடி

ரெயின் பாரஸ்ட்' எனப்படும் செயற்கை மழைக்காடு பகுதியை திறந்து வைத்து பார்வையிட்டார்.
பிரதமர் மோடி
Published on: 

ஏக்தாநகர்,

ரெயின் பாரஸ்ட்' எனப்படும் செயற்கை மழைக்காடு பகுதியை திறந்து வைத்து அந்த படங்களை பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பகிர்ந்து வெளியிட்டுள்ளார்.

பிரதமர் மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று குஜராத் மாநிலம் சென்றார். பனஸ்கந்தாவில் ரூ.14 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அதோடு விவசாயிகளுக்கு 24 தவணையாக ரூ.19 ஆயிரம் கோடியை விடுவித்தார். மேலும் 2 ரெயில் சேவைகளை தொடங்கி வைத்தார்.

2-வது நாளான இன்று காலை 9 மணிக்கு பிரதமர் மோடி நர்மதா மாவட்டத்தில் உள்ள ஏக்தா நகரில் சர்தார் வல்லபாய் பட்டேலின் சிலைக்கு மரியாதை செலுத்தினார். அதை தொடர்ந்து ஏக்தா நகரில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தார்.

இந்தநிலையில், பிரதமர் மோடி 12 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள 'ரெயின் பாரஸ்ட்' எனப்படும் செயற்கை மழைக்காடு பகுதியை திறந்து வைத்து பார்வையிட்டார். அவர் படங்களை பகிர்ந்து வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:

கெவாடியாவில் உள்ள ஏக்தா நகரில் அமைந்துள்ள மழைக்காட்டில் ஒரு அற்புதமான அனுபவம் உங்களுக்காகக் காத்திருக்கிறது. செழிப்பான பசுமை மற்றும் இயற்கையின் அழகு, ஒரு தனித்துவமான அனுபவத்தை வழங்கும். கம்பீரமான சர்தார் வல்லபாய் பட்டேலின் சிலையின் பிரமிக்க வைக்கும் காட்சிகளைக் கண்டு மகிழுங்கள். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

X