

புதுடெல்லி,
நாடு முழுவதும் பா.ஜ.க.வினர் பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசுப் பள்ளிகளில் நேரடி உரையாடல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்துவதன் மூலம் இளம் தலைமுறையினருடனான தொடர்பை வலுப்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி சமீபத்தில் வலியுறுத்தி இருந்தார்.
இந்த நிலையில் இளைஞர்களை, குறிப்பாக 'ஜென்-இசட்' (Gen Z) தலைமுறையினரை சென்றடைவதற்கான பிரத்யேக திட்டத்தை பா.ஜ.க. முன்னெடுத்துள்ளது. இதற்காக பா.ஜ.க. சார்பில் சிறப்பு பிரசார குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதன்படி ‘GEN Z OUTREACH PROGRAMME’ என்ற பெயரில் இளம் வாக்காளர்களைக் கவர்வதற்காக பிரசாரக் குழுவை பா.ஜ.க. தலைமை அமைத்துள்ளது. இந்த குழுவில் பா.ஜ.க. தேசிய தலைவர் நிதின் நபின், ஸ்மிருதி இரானி, வினோத் தாவ்டே, ஹர்ஷ் சங்வி, ஓ.பி.சவுத்ரி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.