

புதுடெல்லி,
டெல்லியின் மீட் நகரில் வசித்து வரும் 22 வயதுடைய இளம்பெண் ஒருவருக்கு திருமணம் முடிவாகி உள்ளது. இந்த நிலையில், வேலைக்காக அலுவலகம் சென்ற அவரை, காதலித்த நபர் வழியில் மறித்து, தலையில் தாக்கி காயம் அடைய செய்துள்ளார்.
இதுபற்றி இளம்பெண்ணின் தந்தை கூறும்போது, எனது மகளுக்கு திருமணம் முடிவாகி உள்ளது. ஆனால், அண்டை வீட்டுக்காரர்களில் ஒருவர் எனது மகளை திருமணம் செய்ய விரும்பியுள்ளார். எனது மகளுக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது அவருக்கு வருத்தம் ஏற்படுத்தி உள்ளது. இதனால், தாக்குதலை நடத்தியுள்ளார் என்று கூறியுள்ளார்.
இதுபற்றி அளித்த புகாரின்பேரில் அந்த வாலிபர் மீது ஜோதி நகர் காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், உத்தர பிரதேசத்தின் லோனி நகரில் உள்ள தனது வீட்டில் அந்த வாலிபர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.