தங்கையை திருமணம் செய்ததற்காக நண்பனை கொன்ற அண்ணன்..!

தங்கையுடன் ஓடிப்போய் திருமணம் செய்து கொண்ட நண்பனை அண்ணன் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தங்கையை திருமணம் செய்ததற்காக நண்பனை கொன்ற அண்ணன்..!
Published on

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலம் சுரு மாவட்டத்தில் தன் தங்கையையுடன் ஓடிப்போய் திருமணம் செய்து கொண்ட நண்பனை அண்ணன் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு ஹரியானா சிறையில் நீதிமன்ற காவலில் இருந்தபோது மனீஷ் மற்றும் விகாஸ் என்ற இருவர் நண்பர்களாகியுள்ளனர். இதில் விகாஸ் பெட்ரோல் பல்க்கில் கொள்ளையடித்ததற்காகவும் மனீஷ் கற்பழித்ததற்காகவும் நீதிமன்றக் காவலில் இருந்துள்ளனர்.

முதலில் ஜெயிலில் இருந்து வெளிவந்த விகாஸ் மனீஷின் ஜாமீனுக்கு ஏற்பாடு செய்துள்ளார். அதன் பிறகு அவரை விகாஸ் தன்னுடைய வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். விகாஸின் தங்கையுடன் நட்பாக பழகிய மனீஷ் 10 மாதங்களுக்கு முன்பு அவரது தங்கை பூஜாவுடன் ஓடிப்போய் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இதையடுத்து விகாஸ் மனீஷை கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். இதனால் பூஜாவும் மனீசும் டெல்லி சென்று அங்கு வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் சனிக்கிழமை இரவு விகாஸை சந்திக்க வந்த மனீஷை விகாஸ் கொலை செய்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை காலை ராஜ்கர் பகுதியில் உள்ள விவசாய பண்ணையில் மனீஷின் உடல் கண்டெடுக்கப்பட்டது. விகாஸ் தலைமறைவாகி விட்டதாகவும் அவரைத் தேடி வருவதாகவும் போலீசார் கூறினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com