அண்ணனுக்கு பார்த்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து 10 கிலோ உப்பைக் கொட்டிய சகோதரர்

10 கிலோ உப்பை சிறுமியின் உடல் மீது கொட்டியதாகதெரிவித்துள்ளார். அதாவது, உப்பை கொட்டினால் அவரது உடல் விரைவாக அழுகும்
அண்ணனுக்கு பார்த்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து 10 கிலோ உப்பைக் கொட்டிய சகோதரர்
Published on

பாட்னா

பீகார் மாநிலம் பாட்னாவின் ஜானிபூர் பகுதியில் இருந்து இளம் பெண்ணின் உடலை போலீசார் மீட்டுள்ளனர். அந்த பெண் குறித்து நடந்த விசாரணையில், நேற்று அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி திடுக்கிட வைத்தன.

அர்வால் பகுதியை சேர்ந்த அந்த பெண் ஒருவருக்கும் ஜெகனாபாத்தில் சேர்ந்த ராணுவ வீரர் ரஞ்சித் குமாருக்கு உறவினருக்கும் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டட்து. அந்த பெண்ணுக்கு பிப்ரவரியில் திருமணம் நடைபெறவிருந்தது ரஞ்சித்தின் இளைய சகோதரன் பிஜேந்திரன் .

திருமணம் நின்றுபோனதை அடுத்து, அந்த பெண்ணுடன் பிஜேந்திரன் நெருங்கி பழகியுள்ளார். இருவரும் அடிக்கடி போனில் பேசிவந்தனர்.இந்த நிலையில் கடந்த நவம்பர் 16 அன்று, பிஜேந்திரன் அந்த பெண்ணுக்கு போன் செய்து, அர்வால் பஜாரில் தன்னை வந்து சந்திக்க அழைத்துள்ளார்.

இதையடுத்து, அந்தபெண்ணும் அங்கு செல்ல அவரை ஜெகனாபாத்தில் உள்ள ஓட்டலுக்கு பிஜேந்திரன் அழைத்துச்சென்றுள்ளார். அங்கு அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த பிஜேந்திரன், அவரின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.

விசாரணையின் போது, குற்றம் சாட்டப்பட்ட பிஜேந்திரன், பெண்ணணை ஓட்டலிலேயே கொன்றுவிட்டு, பாட்னாவின் ஜானிபூரில் ஆள் நடமாட்டம் இல்லாத புதர் நிறைந்த இடத்தில் அவரது உடலைப் புதைத்ததாக போலீசிடம் கூறினார். உடலை அடக்கம் செய்வதற்கு முன், 10 கிலோ உப்பை சிறுமியின் உடல் மீது கொட்டியதாகதெரிவித்துள்ளார். அதாவது, உப்பை கொட்டினால் அவரது உடல் விரைவாக அழுகும் என்றும், உடலை அடையாளம் காண்பது கடினம் என்றும் கூறியுள்ளார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com