இளம்பெண்ணை பலாத்காரம் செய்த காதலன்-நண்பர்களுக்கும் விருந்தாக்கிய கொடூரம்

ஆபாச வீடியோக்களை காட்டி மிரட்டி இளம்பெண்ணை காதலனே பலாத்காரம் செய்த சம்பவம் நடந்துள்ளது. மேலும் அவர் தனது காதலியை தன்னுடைய நண்பர்களுக்கும் விருந்தாக்கிய கொடூரம் அரங்கேறி இருக்கிறது.
இளம்பெண்ணை பலாத்காரம் செய்த காதலன்-நண்பர்களுக்கும் விருந்தாக்கிய கொடூரம்
Published on

பெங்களூரு:-

பலாத்காரம்

பெங்களூரு கொடிகேஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். அவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். அவருக்கு சமூக வலைதளம் மூலம் வாலிபர் ஒருவர் பழக்கம் ஆனார். இருவரும் செல்போன் எண்களை பரிமாறி பேசி வந்தனர். பின்னர் இருவரும் காதலித்ததாக கூறப்படுகிறது. அப்போது தனிமையில் சந்தித்து பேசி வந்தனர். இந்த நிலையில் அந்த வாலிபர், தனது காதலியான இளம்பெண்ணை ஆபாசமாக புகைப்படங்களும், வீடியோக்களும் எடுத்து வைத்திருந்தார். பின்னர் அவர் அந்த பெண்ணின் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்களை காண்பித்து பெண்ணைமிரட்டி உள்ளார்.

மேலும் இதுபோல் மிரட்டி பெண்ணை பலமுறை கற்பழித்து வந்துள்ளார். மேலும் அவர் தனது காதலியை தனது நண்பர்கள் சிலருக்கும் விருந்தாக்கி உள்ளார். பின்னர் அவர்களும் அந்த பெண்ணை மிரட்டி உல்லாசம் அனுபவித்து உள்ளனர். இதற்கிடையே ஆபாச வீடியோக்களை அந்த கும்பல் சமூக வலைதளங்களில் பதிவிட்டது. இதுகுறித்து அறிந்த அந்த பெண், கொடிகேஹள்ளி போலீசில் புகார் அளித்தார்.

3 பேர் கைது

புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இதுதொடர்பாக 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் ஜார்ஜ், சந்தோஷ் மற்றும் சாஷி ஆகியோர் என்பதும் ஜார்ஜ் தான் பெண்ணின் காதலன் என்பதும் தெரிந்தது. இதையடுத்து ஜார்ஜ் உள்பட 3 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களிடம் இருந்து பென்டிரைவ் மற்றும் செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com