

மும்பை,
மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் குறியீடு 334.44 புள்ளிகள் உயர்ந்து 50,948.73 புள்ளிகளாக காணப்படுகிறது.
இதேபோன்று நிப்டி குறியீடு 96.40 புள்ளிகள் உயர்ந்து 14,992.05 புள்ளிகளாக காணப்படுகிறது. ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை கூட்டம் இன்று அதன் தலைவர் சக்தி காந்ததாஸ் தலைமையில் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் குறியீடு உயர்வடைந்து காணப்படுகிறது.
இந்த கூட்டத்தில், வங்கிகளுக்கு கடன் வழங்கும் ரெப்போ ரேட் விகிதம் தொடர்ந்து 4 சதவீதத்தில் நீடிக்கும்படி கொள்கை முடிவு எடுக்கப்படும் என கூறப்படுகிறது.