

புதுடெல்லி,
விஜய் கோயல் மேலும் பேசுகையில், டெல்லி என்ற பெயர் எப்படி வந்தது என்பது உறுதியாக தெரியாவிட்டாலும், டெல்லியை ஆண்ட மவுரிய வம்ச மன்னரான டில்லு என்பவரின் பெயர் அதற்கு சூட்டப்பட்டு டில்லி என மாறியதாக பொதுவாக கூறப்படுகிறது.
இருப்பினும், டெல்லியா, டில்லியா என்பதில் பலருக்கு குழப்பம் இருந்து வருகிறது. தலைநகரின் பெயர், அதன் கலாசாரத்தையும், வரலாறையும் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும். எனவே, டெல்லியின் பெயரை டில்லி என்று மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளித்து பேசிய உள்துறை ராஜாங்க மந்திரி நித்தியானந்த் ராய் டில்லி என பெயர் மாற்றக்கோரி அரசுக்கு கோரிக்கை வைத்தால் சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பி வைத்து அதுகுறித்து உரிய முடிவு எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.