

காசியாபாத்,
உத்தர பிரதேசத்தின் காசியாபாத் நகரில் லோனி பகுதியில் ஓட்டல் ஒன்றில் ரொட்டி தயாரிப்பில் ஈடுபட்ட நபர் ஒருவர் அதில் எச்சிலால் துப்பியுள்ளார். இதுபற்றிய வீடியோ வைரலானது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து இந்து அமைப்பினர் போலீசில் புகார் அளித்தனர். இதுபற்றி விசாரணை நடத்திய போலீசார் தொடர்புடைய நபரை கைது செய்துள்ளனர். வீடியோ உண்மை என்பது நிரூபணம் ஆனால், அந்த நபருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வட்ட அதிகாரியான ரஜ்னீஷ் உபாத்யாய் தெரிவித்துள்ளார்.