சி.பி.ஐ.யில் 1,117 வழக்குகள் நிலுவையில் உள்ளன - மத்திய மந்திரி ஜிதேந்திரசிங் தகவல்

சி.பி.ஐ.யில் 1,117 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக மத்திய பணியாளர் நலத்துறை இணை மந்திரி ஜிதேந்திரசிங் தெரிவித்துள்ளார்.
சி.பி.ஐ.யில் 1,117 வழக்குகள் நிலுவையில் உள்ளன - மத்திய மந்திரி ஜிதேந்திரசிங் தகவல்
Published on

புதுடெல்லி,

நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, சி.பி.ஐ.யில் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு மத்திய பணியாளர் நலத்துறை இணை மந்திரி ஜிதேந்திரசிங் பதிலளித்தார்.

அவர் அளித்த பதிலில், கடந்த டிசம்பர் 31-ந் தேதி நிலவரப்படி, சி.பி.ஐ.யில் 1,117 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தெரிவித்துள்ளார். இவற்றில் 18 வழக்குகள், 7 ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் உள்ளதாகவும் மத்திய மந்திரி ஜிதேந்திரசிங் தெரிவித்துள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com