மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதுகள் அறிவிப்பு


மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதுகள் அறிவிப்பு
x
தினத்தந்தி 25 Jan 2026 2:57 PM IST (Updated: 25 Jan 2026 3:09 PM IST)
t-max-icont-min-icon

பொது சேவை மற்றும் முக்கிய துறைகளில் குறிப்பிடத்தக்க சாதனை புரிந்தவர்களை கவுரவிக்க இந்த விருது வழங்கப்படுகிறது.

புதுடெல்லி,

பத்ம விருதுகள் ஆண்டுதோறும் குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்படும் இந்தியாவின் உயரிய சிவிலியன் விருதுகளில் ஒன்றாகும். இந்த விருதுகள் பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகின்றன. பொது சேவை மற்றும் முக்கிய துறைகளில் குறிப்பிடத்தக்க சாதனை புரிந்தவர்களை கவுரவிக்க இந்த விருது வழங்கப்படுகிறது.

அந்த வகையில், 2026-ம் ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் மொத்தம் 5 பேருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தமிழ்நாட்டைச் சேர்ந்த கால்நடை மருத்துவ ஆராய்ச்சியாளர் புண்ணிய மூர்த்தி நடேசன், ஓதுவார் திருத்தணி சுவாமிநாதன், ஓவியர் நீலகிரி ஆர். கிருஷ்ணன், சிற்பக் கலைஞர் காளியப்ப கவுண்டர், திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புதுச்சேரியை சேர்ந்த சிலம்பக் கலைஞர் கே.பழனிவேலுக்கும் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story