வரிப் பகிர்வாக தமிழ்நாட்டுக்கு ரூ.4,144 கோடி விடுவித்தது மத்திய அரசு

கோப்புப்படம்
மாநில அரசுகளுக்கான ரூ.1 லட்சம் கோடி வரிப்பகிர்வு நிதியை மத்திய நிதியமைச்சகம் விடுவித்துள்ளது.
புதுடெல்லி,
வரவிருக்கும் பண்டிகை காலத்தைக் கருத்தில் கொண்டு, மாநிலங்கள் மூலதனச் செலவினங்களை விரைவுபடுத்தவும், அவற்றின் வளர்ச்சி மற்றும் நலன்கள் தொடர்பான செலவினங்களுக்கு நிதியளிக்கவும், மத்திய அரசு ரூ.1,01,603 கோடி வரிப் பகிர்வை மாநில அரசுகளுக்கு முன்கூட்டியே ஒரு தவணையாக வெளியிட்டுள்ளது.
இதன்படி தமிழ்நாட்டுக்கு ரூ.4,144 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக உத்தரபிரதேசத்திற்கு ரூ.18,227 கோடியும், பீகாருக்கு ரூ.10,219 கோடியும், மத்திய பிரதேசத்திற்கு ரூ.7,676 கோடியும், மகாராஷ்டிராவுக்கு ரூ.6,418 கோடியும் விடுவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story






