'அக்னிபத்' திட்டத்தை மத்திய அரசு கைவிடவேண்டும்; சித்தராமையா வலியுறுத்தல்

அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு கைவிடவேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா வலியுறுத்தி உள்ளார்.
'அக்னிபத்' திட்டத்தை மத்திய அரசு கைவிடவேண்டும்; சித்தராமையா வலியுறுத்தல்
Published on

உப்பள்ளி;

அக்னிபத் திட்டம்

ராணுவத்துக்கு ஆள்சேர்க்க 'அக்னிபத்' என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்திற்கு இளைஞர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மேலும் வடமாநிலங்களில் ரயில்கள், பஸ்களுக்கு தீ வைத்து இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அக்னிபத் திட்டம் குறித்து உப்பள்ளியில் காங்கிரஸ் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வரும் இளைஞர்கள், வன்முறையை கையில் எடுக்க கூடாது. அமைதியான முறையில் போராட்டம் நடத்தவேண்டும். மேலும் மத்திய, மாநில அரசுகள் போராட்டத்தில் ஈடுபடும் இளைஞர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும். அதே நேரம் மத்திய அரசு 'அக்னிபத்' திட்டத்தை கைவிடவேண்டும்.

பா.ஜனதா தூண்டிவிட்டது

குறிப்பிட்ட சமுதாயத்தை இழிவுப்படுத்தி பேசியதாக செலவாதி நாராயணசாமி என் மீது புகார் அளித்துள்ளார். இதன் பின்னணியில் பா.ஜனதா உள்ளது. பா.ஜனதா தூண்டிவிட்டதன் பேரில்தான் என் மீது குற்றம் சாட்டியுள்ளார்.

நான் எந்த சமுதாயத்தையும் இழிவாக பேசவில்லை. இருப்பினும் இந்த வழக்கை சட்டரீதியாக சந்திப்பேன். இது தொடர்பாக எனது வக்கீலுடன் ஆலோசனை நடத்தி வருகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com