வேளாண் சட்டத்தை போல் அக்னிபாத் திட்டத்தையும் மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும்...! - ராகுல் காந்தி

வேளாண் சட்டத்தை போல் அக்னிபாத் திட்டத்தையும் மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என்றும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
Image Courtacy: PTI
Image Courtacy: PTI
Published on

புதுடெல்லி,

ராணுவத்துக்கு ஆள் சேர்க்க 'அக்னிபத்' என்ற புதிய திட்டத்தை கடந்த 14-ந் தேதி மத்திய அரசு அறிவித்தது. 4 ஆண்டுகளுக்கு மட்டும் ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்கள் சேர்க்கப்படுகிறார்கள். 'அக்னிபத்' ஆட்சேர்ப்புத் திட்டத்திற்கான வயது வரம்பு குறைந்தபட்சம் 17 முதல் அதிகபட்சமாக 23-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும்,மத்திய அரசு கொண்டு வந்துள்ள அக்னிபத் திட்டத்துக்கு இளைஞர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், ஜம்மு-காஷ்மீர், டெல்லி, அரியானா, உத்தர பிரதேசம், பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களில் தொடர்ந்து இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனிடையே, பீகாரில் 12 மாவட்டங்களில் இணையதள சேவை துண்டிக்கப்பட்டது.

இந்த சூழலில், அக்னிபத் திட்டத்திற்கு எதிராக தொடரும் போராட்டங்களுக்கு மத்தியில், இத்திட்டத்தின்கீழ் துணை ராணுவத்தில் சேரும் அக்னிபத் வீரர்களுக்கு மத்திய ஆயுதப்படை மற்றும் அசாம் ரைபிள்ஸ் பிரிவில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் வேளாண் சட்டத்தை போல் அக்னிபாத் திட்டத்தையும் மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என்றும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், "தொடர்ந்து 8 ஆண்டுகளாக, பா.ஜ.க. அரசு 'ஜெய் ஜவான், ஜெய் கிசான்' கொள்கைகளை அவமதித்து வருகிறது.

கருப்பு விவசாய சட்டத்தை பிரதமர் திரும்பப் பெற வேண்டும் என்று நான் முன்பே கூறியிருந்தேன். அதே போல, நாட்டின் இளைஞர்களுக்கு தலைவணங்கி 'அக்னிபத்' திட்டத்தை திரும்பப் பெற வேண்டும்" என்று அதில் ராகுல்காந்தி பதிவிட்டுள்ளார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com