70 ஆண்டுகளை நிறைவு செய்த மத்திய ரெயில்வே...

மத்திய ரெயில்வே 70 ஆண்டுகளை நிறைவு செய்து உள்ளது.
70 ஆண்டுகளை நிறைவு செய்த மத்திய ரெயில்வே...
Published on

மும்பை,

மும்பையில் மின்சார ரெயில் சேவை மக்களின் உயிர்நாடியாக உள்ளது. இங்கு மத்திய, மேற்கு ரெயில்வே சார்பில் மின்சார ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் கர்ஜத், கசாரா- சி.எஸ்.எம்.டி. இடையே தினந்தோறும் 1,500-க்கும் அதிகமான மின்சார ரெயில்களை மத்திய ரெயில்வே இயக்கி வருகிறது. இதில் மட்டும் சுமார் 40 லட்சம் மக்கள் பயணம் செய்கின்றனர்.

மத்திய ரெயில்வே கடந்த 1951-ம் ஆண்டு நவம்பர் 5-ந் தேதி அமைக்கப்பட்டது ஆகும். எனவே நேற்று மத்திய ரெயில்வே தனது 70-வது ஆண்டை நிறைவு செய்து உள்ளது.

இந்தியாவின் முதல் ரெயில் மும்பை - தானே இடையே உள்ள மத்திய ரெயில்வே வழித்தடத்தில் கடந்த 1853-ம் ஆண்டு ஏப்ரல் 16-ந் தேதி இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது மத்திய ரெயில்வே 1,575 கி.மீ. பரந்து விரிந்து உள்ளது. இங்கு இருந்து நாட்டின் பெரும்பாலான பகுதிகளுக்கு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

மும்பை, புஷாவல், நாக்பூர், சோலாப்பூர், புனே ஆகிய 5 கோட்டங்களை கொண்ட மத்திய ரெயில்வேயில் 471 ரெயில் நிலையங்கள் உள்ளன. மேலும் மத்திய பிரதேசம், கர்நாடகா மாநிலங்களில் வரையும் விரிந்து உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com