புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆறு வழிச் சாலையை திறந்து வைத்தார் குஜராத் முதல்-மந்திரி

தாராபூரிலிருந்து வாசத் வரை புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆறு வழிச் சாலையை குஜராத் முதல்-மந்திரி பூபேந்திர படேல் திறந்து வைத்தார்.
புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆறு வழிச் சாலையை திறந்து வைத்தார் குஜராத் முதல்-மந்திரி
Published on

காந்திநகர்,

குஜராத் முதல்-மந்திரி பூபேந்திர படேல் ஆனந்த் மாவட்டத்தில் தாராபூரிலிருந்து வாசத் வரை புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆறு வழிச் சாலையை பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தார்.

இந்த ஆறு வழிச் சாலையானது மாநில நெடுஞ்சாலை 8ல் 48 கிமீ நீளத்துக்கு ரூ .1005 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது. சாலையை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நெடுஞ்சாலையில் உள்ள போச்சாசன் கிராமத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மாநில நெடுஞ்சாலை 8ன் வாசத் தாராபூர் நீட்டிப்பு தெற்கு குஜராத்தை மராட்டிய பிராந்தியத்துடன் இணைக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com