காங்கிரஸ் காரிய கமிட்டி இந்த மாதம் கூடுகிறது

உட்கட்சி பிரச்சினைகளை விவாதிக்க காங்கிரஸ் காரிய கமிட்டி இம்மாதம் கூடுகிறது.
காங்கிரஸ் காரிய கமிட்டி இந்த மாதம் கூடுகிறது
Published on

புதுடெல்லி,

காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம், இம்மாத இறுதிக்குள் நடைபெறும் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.பஞ்சாப், சத்தீஸ்கார் உள்ளிட்ட மாநிலங்களில் காங்கிரசில் உட்கட்சி பூசல்கள் நிலவி வருகின்றன.

இதற்கிடையில் பல மாநிலங்களில் மூத்த நிர்வாகிகள் வேறு கட்சிகளுக்கு தாவி வருகிறார்கள்.இவை பற்றியெல்லாம் விவாதிப்பதற்காக காரிய கமிட்டி கூட்டம் நடைபெற இருப்பதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. கட்சி தலைவர் சோனியாகாந்தி ஏற்கனவே இதை சூசகமாக தெரிவித்துள்ளதாகவும் அவ்வட்டாரங்கள் தெரிவித்தன.

அதிருப்தி தலைவர்களாக கருதப்படும் குலாம்நபி ஆசாத், கபில் சிபல் போன்றவர்கள் காரிய கமிட்டி கூட்டத்தை கூட்டுமாறு கோரிக்கை விடுத்தநிலையில், இக்கூட்டம் நடக்க இருக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com