

புதுடெல்லி,
காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்நிலையில் மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு முயன்று வரும் நிலையில், காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் 13-வது ஆலோசனைக்கூட்டம் டெல்லியில் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. டெல்லி, சேவா பவனில் மத்திய நீர்வளத்துறை ஆணையர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரியை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.