

மும்பை,
தலைநகர் மும்பையில் நேற்று முன்தினம் பாதிப்பு ஆயிரத்திற்கு கீழ் குறைந்து இருந்தது. இந்தநிலையில் நேற்று புதிதாக 1,350 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்து 92 ஆயிரத்து 239 ஆக உயர்ந்து உள்ளது. இதில் 6 லட்சத்து 46 ஆயிரத்து 163 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போது 29 ஆயிரத்து 643 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நகரில் மேலும் 57 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியானார்கள். இதனால் தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 409 ஆக உயர்ந்து உள்ளது.
நகரில் தொற்று பாதித்தவர்களில் 93 சதவீதம் பேர் குணமாகி உள்ளனர். நோய் பரவல் இரட்டிப்பாகும் காலம் 369 நாட்களாக உள்ளது. நகால் 78 கட்டுப்பாட்டு மண்டலங்கள் உள்ளன. 284 கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
தாராவியில் புதிதாக 8 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 6 ஆயிரத்து 736 ஆகி உள்ளது. இதில் 5 ஆயிரத்து 998 பேர் குணமடைந்தனர். தற்போது 394 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.