

லக்னோ,
இது குறித்து பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
ஏழைகள் மற்றும் நலிந்த பிரிவினருக்கான கொரோனா சிகிச்சை செலவுகளை மத்திய அரசு ஏற்றுக்கொள்வதுடன் தடுப்பூசியையும் இலவசமாக போட வேண்டும். கட்சி அரசியலை கடந்து, அனைத்து கட்சிகளும் இந்த கோரிக்கையை விடுக்க வேண்டும்.
ஒருவேளை மத்திய அரசு இதை ஏற்றுக்கொள்ளாவிட்டால், மாநில அரசுகள் தங்களது அத்தியாவசியமற்ற செலவுகளை குறைத்துக்கொண்டு, இந்த செலவை ஏற்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.