பிரதமர் மோடி தலைமையில் இந்தியா பாதுகாப்பாக உள்ளது - ஜே.பி.நட்டா

பிரதமர் மோடி தலைமையில் இந்தியா பாதுகாப்பாக உள்ளது என்றும் அது சாமானியர்களுக்கு தெரியும் என ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தலைமையில் இந்தியா பாதுகாப்பாக உள்ளது - ஜே.பி.நட்டா
Published on

திருவனந்தபுரம்,

திருவனந்தபுரத்தில் நடபெற்ற கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பேசியதாவது:-

பிரதமர் மோடி தலைமையில் இந்தியா பாதுகாப்பாக உள்ளது, சாமானியர்களுக்கு தெரியும். எங்களின் உள்விவகாரங்களை நாங்கள் தீர்த்துக்கொள்வோம். விவசாயிகளுடன் எப்போது வேண்டுமானாலும் பேச தயாராக இருக்கிறோம். விவசாயிகள் பிரச்சினை குறித்த வெளிநாட்டு பிரபலங்களின் கருத்துக்கு ஜே.பி.நட்டா விளக்கம் அளித்தார்.

வருகின்ற சட்டப்பேரவை தேர்தலில், கேரள மக்களின் ஆதரவை பாஜக பெறப்போகிறது. தற்போது உள்ள அரசாங்கத்தின் மீது மக்கள் வெறுப்பில் உள்ளார்கள்.

தங்கக் கடத்தல் வழக்கு உலகெங்கிலும் உள்ள கேரள மக்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. பினராயி விஜயன் நம்பகத்தன்மையை இழந்துவிட்டார். தங்கக் கடத்தல் வழக்கு விசாரணை முடிவிற்கு வரும்போது மேலும் பல அமைச்சர்கள் வெளிச்சத்திற்கு வருவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com