2022-23-ம் நிதியாண்டில் நாட்டின் ஜி.டி.பி. மதிப்பிடப்பட்ட 7%-க்கு கூடுதலாக இருக்கும்; ஆர்.பி.ஐ. கவர்னர்

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி நடப்பு 2022-23-ம் நிதியாண்டில் மதிப்பிடப்பட்ட 7%-க்கு கூடுதலாக இருக்கும் என ஆர்.பி.ஐ. கவர்னர் இன்று கூறியுள்ளார்.
2022-23-ம் நிதியாண்டில் நாட்டின் ஜி.டி.பி. மதிப்பிடப்பட்ட 7%-க்கு கூடுதலாக இருக்கும்; ஆர்.பி.ஐ. கவர்னர்
Published on

புதுடெல்லி,

நடப்பு ஆண்டின் தொடக்கத்தில், வெளியான 2022-23 ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையில், இந்தியா 7 சதவீத வளர்ச்சி காணும் என முன்னறிவிக்கப்பட்டு இருந்தது.

அடுத்த நிதியாண்டான 2023-24-ல் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி.) 6.5 சதவீதம் என்ற அடிப்படையில் இருக்கும் என அந்த அறிக்கை தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில், புதுடெல்லியில் நடந்த இந்திய தொழில்களுக்கான கூட்டமைப்பு நிகழ்ச்சி ஒன்றில் மத்திய ரிசர்வ் வங்கி (ஆர்.பி.ஐ.) கவர்னர் சக்தி காந்ததாஸ் இன்று பங்கேற்று பேசினார்.

அப்போது அவர் கூறும்போது, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 7 சதவீதத்திற்கு சற்று கூடுலானாலும் நான் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை என கூறியுள்ளார்.

இந்திய நிதி கொள்கை மற்றும் அதன் வருங்கால செயல்பாடு பற்றி அவர் பேசும்போது, அது தனது கைகளில் இல்லை. களநிலவரம் அடிப்படையிலேயே அது அமையும். பணவீக்கம் எப்படி குறையுமோ அதற்கேற்ப இருக்கும் என அவர் கூறியுள்ளார்.

நடப்பு நிதியாண்டில் கடந்த ஏப்ரலில், முதல் நிதி கொள்கை சீராய்வு கூட்டத்தின்போது, ரெப்போ வட்டி விகிதம் அளவானது, மாற்றமின்றி 6.5 சதவீதம் என்ற அளவில் தொடர்ந்து நீடிக்க செய்வது என முடிவு செய்து ரிசர்வ் வங்கி அறிவித்தது.

இந்த ரெப்போ வட்டி விகிதம் ஆனது, பிற வங்கிகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதம் ஆகும். அடுத்த நிதி கொள்கை சீராய்வு கூட்டம் வருகிற ஜூன் 6 முதல் 8 வரை நடைபெற திட்டமிடப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com