

புதுடெல்லி,
டெல்லியில் கடந்த சில மாதங்களாக கெரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் பெருமளவு குறைந்து வருகிறது. இதையடுத்து மாநிலத்தில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டன, இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பி உள்ளது.
இந்நிலையில், மாநிலத்தின் கொரோனா பாதிப்பு குறித்து அம்மாநில சுகாதாரத்துறை மந்திரி சத்யேந்திர ஜெயின் கூறுகையில்,
டெல்லியில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் உள்ளது. மாநிலத்தில் கொரோனா பாதிப்பு விகிதம் 0.4 சதவீதமாக குறைந்துள்ளது. மேலும், அடுத்த 6 மாதங்களில் 2,800 தீவிர சிகிச்சை படுக்கைகளை கொண்ட 7 மருத்துவமனைகளில் உருவாக்க டெல்லி அரசு முடிவு செய்துள்ளது என்று கூறினார்.