நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டோர் எண்ணிக்கை 1. 63 கோடியை தாண்டியது - மத்திய காதாரத்துறைஅமைச்சகம்

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1. 63 கோடியை தாண்டியுள்ளதாக மத்திய காதாரத்துறைஅமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டோர் எண்ணிக்கை 1. 63 கோடியை தாண்டியது - மத்திய காதாரத்துறைஅமைச்சகம்
Published on

புதுடெல்லி,

இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் 3-ந் தேதி உள்நாட்டில் தயாரிக்கப்படுகிற கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய தடுப்பூசிகளுக்கு அவசர கால பயன்பாட்டு ஒப்புதல் தரப்பட்டது. அதைத் தொடர்ந்து 16-ந் தேதி முதல் கட்டமாக 1 கோடி சுகாதார பணியாளர்கள், 2 கோடி முன் களபணியாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.

இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி இதன் 2-வது கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும், இணைநோய்களுடன் போராடும் 45-59 வயதானவர்களுக்கும் தடுப்பூசி போடும் பணி தொடங்கி நடந்து வருகிறது. முதல் நாளில் பிரதமர் மோடி டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு சென்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். இரண்டாவது கட்டத்தின் 3-வது நாளான இன்று பல்வேறு மாநில முதல்வர்கள் மற்றும் மாநில ஆளுநர்கள், மத்திய மந்திரிகள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1. 63 கோடியை தாண்டியுள்ளதாக மத்திய காதாரத்துறைஅமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்ப்பில்,

நாடுமுழுவதும் இன்று (புதன்கிழமை) மட்டும் மாலை 7 மணி வரை 6,92,889 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டோர் மொத்தம் எண்ணிக்கை1,63,14,485 ஆக உள்ளது.

அதன்விவரம் பினவருமாறு:-

* சுகாதாரத்துறை ஊழியர்கள் முதல் டோஸ்; இன்று மட்டும் 33,016 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. மொத்தம் 67,75,619 ஆகும்.

* சுகாதாரத்துறை ஊழியர்கள் இரண்டாம் டோஸ்; இன்று மட்டும் 1,11,080 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. மொத்தம் 28,24,311 ஆகும்.

* முன்களப்பணியாளர்கள் முதல் டோஸ்; இன்று மட்டும் 1,91,797 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. மொத்தம் 57,62,131 ஆகும்.

* முன்களப்பணியாளர்கள் இரண்டாம் டோஸ்;இன்று மட்டும் 2,443 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. மொத்தம் 3,277 ஆகும்.

* 60 வயதுக்கு மேற்பட்டோர் முதல் டோஸ்; இன்று மட்டும் 3,22,189 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. மொத்தம் 8,44,884 ஆகும்.

* 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்கள் இரண்டாம் டோஸ்; இன்று மட்டும் 32,364 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. மொத்தம் 1,04,263 ஆகும். இவ்வாறாக நாடுமுழுவதும் 1,63,14,485 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com